Newsஅமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே நிலவும் பதற்றம்

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே நிலவும் பதற்றம்

-

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அந்த நாட்டின் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் பணியிடமாகும். 

இந்த வெள்ளை மாளிகைக்கு அருகிலேயே துணை ஜனாதிபதியின் அலுவலகம் மற்றும் பிற அரசாங்க அலுவலகங்கள் அமைந்துள்ளன. 

இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பின்னர் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். 

தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு மளமளவென பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். 

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. எனினும் இந்த சம்பவத்தால் வெள்ளை மாளிகை அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

ANU மனநல மருத்துவமனையில் கத்தியால் குத்திய சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) இரண்டு மாணவர்களை கத்தியால் கடுமையாக காயப்படுத்திய 26 வயதான Alex Ophel-ஐ, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான மனநல மருத்துவமனையில் அடைக்க...