Newsமொசாம்பிக்-மாலாவியை தாக்கிய பிரெடி புயல் - 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மொசாம்பிக்-மாலாவியை தாக்கிய பிரெடி புயல் – 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

-

மேற்கு அவுஸ்திரேலியாவின் கரையோரத்தில் பெப்ரவரி முதல் வாரத்தில் பிரெடி புயல் உருவானது. 

இதுவரை இல்லாத அளவில் மிக நீண்டகால வெப்பமண்டல புயலாக கருதப்பட்ட இந்த புயல் பெப்ரவரி 21ல் மடகாஸ்கர் வழியாகவும், பின்னர் இந்திய பெருங்கடல் முழுவதும் பரவி பெப்ரவரி 24-ம் திகதி மொசாம்பிக்கிலும் கரைகடந்தது. 

இதனால் அங்கு பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, மண் சரிவுகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குள் மொசாம்பிக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பிரெடி புயல் தாக்கியது. 

அண்டை நாடான மாலாவியையும் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த மாதம் மட்டும் இரண்டு முறை பிரெடி புயல் கரை கடந்துள்ளது. 

இரவு நேரம் புயல் கரை கடந்ததால் மலாவியில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 

வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த 99 பேர் உயிரிழந்தனர். 134 பேர் காயமடைந்தனர். 16 பேரை காணவில்லை. 

மொசாம்பிக்கில் 10 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை விவகாரத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக விக்டோரியா மருத்துவமனைகளில் பல அறுவை சிகிச்சைகள் ரத்து

விக்டோரியாவில் உள்ள பொது மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சுகாதார ஊழியர்கள் தங்கள் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய...