நியூ சவுத் வேல்ஸில் உள்ள பள்ளிகளில் ஃபோன் ஜாமர்களை நிறுவுவதற்கான திட்டத்தை மாநில தொழிலாளர் கட்சி சமர்ப்பித்துள்ளது.
25ஆம் தேதி மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால், அந்த முன்மொழிவு அமல்படுத்தப்படும் என்று மாநில தொழிலாளர் கட்சித் தலைவர் கிறிஸ் மின்ன்ஸ் கூறுகிறார்.
நியூ சவுத் வேல்ஸில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி நேரங்களில் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் திட்டத்தைக் கொண்டுவருவதாக தொழிலாளர் கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால், தொலைபேசி ஜாமர்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கிறிஸ் மின்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் – அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மருத்துவ தேவையுள்ள மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.