Newsகனடாவில் கோர விபத்தில் இருவர் பலி

கனடாவில் கோர விபத்தில் இருவர் பலி

-

கனடாவின் கியூபெக் மாகாணம் ஆம்கி நகரத்தில் நேற்று முன்தினம் சாலையோரம் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து கியூபெக் மாகாணம் ஆம்கி நகரத்தில் சிலர் சாலையோரம் நடந்து சென்றுளளனர். அப்போது அந்த வழியாக வந்த லொரி ஒன்று திடீரென சாரதி கட்டுப்பாட்டை இழந்துள்ளது. பின்னர் அங்கு சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியுள்ளது. 

இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

இந்த விபத்தினை ஏற்படுத்திய லொரி சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...