Breaking News41% ஆஸ்திரேலியர்கள் பேர் உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம்...

41% ஆஸ்திரேலியர்கள் பேர் உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான அறிக்கை

-

18 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்களில் 41 சதவீதம் பேர் அல்லது 800,000 பேர் 15 வயதை எட்டிய பிறகு உடல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 43 சதவீத ஆண்களும், 39 சதவீத பெண்களும் இத்தகைய வன்முறைக்கு ஆளாகின்றனர்.

2021-2022 காலகட்டத்தில் 12,000 ஆஸ்திரேலியர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1/5 பெண்களும் 1/16 ஆண்களும் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது.

மேலும், 1/3 பெண்களும், 2/5 ஆண்களும் உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆண், பெண் இருபாலருக்கும் எதிரான வன்முறை வீதங்கள் குறைந்துள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் தெரிவித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...