Newsதன்னை பற்றி கூகுளில் தேடியவருக்கு மரண தண்டனை விதித்த கிம் ஜோங்...

தன்னை பற்றி கூகுளில் தேடியவருக்கு மரண தண்டனை விதித்த கிம் ஜோங் உன்

-

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உனின் தந்தை கிம் ஜோங்–2 மறைவுக்குப் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து  புதிய ஜனாதிபதியா  பொறுப்பு ஏற்று, அவரின் தந்தை போன்றே இவரும் கம்யூனிச அரசை நிர்வகித்து வருகிறார்.

அதனால் தன்னை எதிர்ப்பவர்களையும், அரசுக்கு எதிராக சதி செய்பவர்களையும் தண்டிக்கும் வகையில் மரணத் தண்டனை விதித்து வருகிறார்.

கிழக்காசிய நாடான வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள தடையுள்ளது. அதுபோல, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்களும் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.

ஜனாதிபதியாக  கிம் ஜோங் உன் மற்றும் அவருடைய குடும்பத்தாரை பற்றிய செய்திகளும் வெளியுலகுக்கு தெரியாது. இதற்காக, வட கொரியாவில், இணையதளம் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில், ‘பியூரோ 10’ என்றழைக்கப்படும், அந்த நாட்டின் உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ‘கூகுள்’ இணையதளத்தில் சமீபத்தில், ஜனாதிபதி கிம் ஜோங் உன் குறித்த தகவல்களை விவரமாக தேடிய நிலையில், இதனை எப்படியோ அறிந்து கொண்ட கிம் ஜோங் உன் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கியால் சுடும் படைப் பிரிவினரால், அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இது, அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மரணத் தண்டனைக்கு எதிராகக் குரல் எழுந்து வரும் நிலையில், வடகொரிய ஜனாதிபதி மரணத் தண்டனை விதிப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் புதிய பொதுப் போக்குவரத்து விதிகள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், விக்டோரியாவின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். மாநிலம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட...

நியூயார்க் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் மேயர்

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு விழாவில், அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்தின் உழைக்கும் மக்களுக்காக உழைப்பதாக அவர் உறுதியளித்தார். 34 வயதான...

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...