குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ரயில் பாதுகாப்பு கதவுகளில் மோதி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதுபோன்ற 85 விபத்துகள் பதிவாகியுள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2021ஐ விட இது 13 விபத்துகள் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்வே கேட்டை மூடிய நிலையில் வாகனங்களை உள்ளே நுழைய முயற்சிப்பதே இந்த விபத்துக்களுக்குக் காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து சட்டத்தின்படி, எச்சரிக்கை அறிகுறிகளை மீறும் ஓட்டுனர்களுக்கு $431 அபராதம் மற்றும் 03 டிமெரிட் புள்ளிகள் – ரயில் கதவுகளை சேதப்படுத்தும் டிரைவர்களுக்கு $1150 மற்றும் 04 டிமெரிட் புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.