இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சிட்னியில் சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், 165 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 165 ஆண்டுகளில், சிட்னி நகரில் இலையுதிர் காலத்தில் எந்த நேரத்திலும் தொடர்ந்து 04 நாட்களுக்கு 30 டிகிரிக்கு மேல் வெப்பநிலை இருந்ததில்லை.
இருப்பினும், இந்த வார இறுதியில் நியூ சவுத் வேல்ஸ் – குயின்ஸ்லாந்து – தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா வழியாக வலுவான சூடான காற்று வீசும் அபாயம் உள்ளது.
அதன்படி, மேற்கு சிட்னி பகுதியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும், பிரிஸ்பேன் – கான்பரா, மெல்போர்ன் ஆகிய நகரங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நியூ சவுத் வேல்ஸின் பல பகுதிகளில் முழு தீ தடுப்பு (Total Fire Ban) அமலில் உள்ளது.