News2 ஆண்டுக்கு பின் செயல்பாட்டிற்கு வந்தது டிரம்பின் பேஸ்புக்

2 ஆண்டுக்கு பின் செயல்பாட்டிற்கு வந்தது டிரம்பின் பேஸ்புக்

-

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டு வந்தார். 

இதனிடையே, 2021 தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்து ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெற்றார். 

ஆனால், தனது தோல்வியை ஏற்க மறுத்த டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறை தூண்டும் வகையில் பேசினார். 

இதை அவர் தனது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பினார். அவரது பேச்சையடுத்து ஜனவரி 6-ம் திகதி டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து வன்முறையை தூண்டியதாக டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டன. 

இந்நிலையில், 2 ஆண்டுகளாக முடக்கப்பட்ட டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளன. 

சமூகவலைதள பக்கங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் டொனால்டு டிரம்ப் தனது பேஸ்புக், யூடியூப் பக்கங்களில் ‘நான் திரும்ப வந்துவிட்டேன்’ என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை இணைத்துள்ளார். 

2024-ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி தமிழன்

Latest news

Coles கடைகளில் இன்று முதல் கத்தி விற்பனைக்கு தடை

ஆஸ்திரேலியாவின் பிரபல பல்பொருள் அங்காடியான Coles-இல் இனி கத்தி விற்பனையை நிறுத்தியுள்ளது. 13 வயது சிறுவன் ஊழியர் ஒருவரை குத்தியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள Coles...

சர்வதேச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக மாற ஆஸ்திரேலியாவிடமிருந்து ஒரு புதிய திட்டம்

சர்வதேச தலையீடுகளில் இருந்து சுதந்திரமாக இருக்க ஆஸ்திரேலிய அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. வெளிநாட்டு தாக்கங்கள் காரணமாக அவுஸ்திரேலியாவின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் தேசிய நலன்கள் அச்சுறுத்தலுக்கு...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...

மெல்பேர்ண் வாடகை விலைகள் பற்றி வெளியான மகிழ்ச்சியான அறிக்கை

2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் வாடகை வீடுகளின் விலைகள் சாதனையாகக் குறைந்த முக்கிய நகரமாக மெல்பேர்ண் பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த காலாண்டில் வாடகை வீடுகளின் விலையில்...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...