Newsஈரான் சிறையில் சிறுமிகள் துஷ்பிரயோகம் - வெளியான அதிர்ச்சி தகவல்

ஈரான் சிறையில் சிறுமிகள் துஷ்பிரயோகம் – வெளியான அதிர்ச்சி தகவல்

-

ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் திகதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை ஈரான் அறநெறி பொலிஸார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட மாஷா அமினியை பொலிஸார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா செப்டம்பர் 16-ம் திகதி உயிரிழந்தார். 

இதனையடுத்து, ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் மாத கணக்கில் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் வெற்றியாக இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தும் ‘அறநெறி பொலிஸ்’ பிரிவை ஈரான் கலைத்துள்ளது.

அதேவேளை, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கியதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அதில் சிலருக்கு ஈரான் அரசாங்கம் தூக்கு தண்டனையையும் நிறைவேற்றியுள்ளது.

அவர்களில் பலர் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்ட 22 ஆயிரம் பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிறுவர், சிறுமிகளிடம் இருந்து உண்மைகளை வரவழைக்கிறோம் என்று கூறி, கொடூர சித்ரவதைகள் நடந்து வருகின்றன என ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் என்ற மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. 

இதன்படி, இராணுவத்தினரிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட 12 வயது உடைய சிறார்கள் முதற்கொண்டு இந்த கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். 

அவர்கள் மீது ஈரான் உளவு அமைப்பு மற்றும் பாதுகாப்பு வீரர்கள் அடித்து, துன்புறுத்துதல், மின்சார அதிர்ச்சி கொடுத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பிற பாலியல் வன்முறைகள் ஆகியவை நடத்தப்படுகின்றன. 

ஈரானின் புரட்சிகர படைகளும் மற்றும் பசிஜ் என்ற துணை இராணுவ படையினரும் கூட இந்த சித்ரவதை செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இவர்களில் 2 சட்டத்தரணிகள் மற்றும் 17 வயதுக்கு வந்தோர்கள் என நேரடி சாட்சியாக உள்ள 19 பேரிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்தும் சித்ரவதை பற்றிய பரவலான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என அந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது என சி.என்.என். தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் ஈரானில் உள்ள 31 மாகாணங்களில் 25 மாகாணங்களில், 5 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு மர்ம முறையில் விஷம் கொடுக்கப்பட்டு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவம் வெளிவந்து உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

ஈரானின் தலைவர் அயோத்துல்லா அலி காமினேனி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், இதனை மன்னிக்க முடியாத குற்றம் என்றும் இரக்கமின்றி விசாரணை நடத்துங்கள் என்றும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

நன்றி தமிழன்

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...