பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மணிமகுடத்தை அலங்கரித்த கோஹினூர் வைரம், லண்டனில் நடைபெறும் பிரிட்டன் கிரீட ஆபரண கண்காட்சியில் வெற்றியின் சின்னமாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
முடிசூட்டு ஆண்டைக் குறிக்கும் வகையில் லண்டன் டவரில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கிரீட ஆபரணங்களின் வரலாறு பற்றிய குறிப்புகள் இடம்பெறவுள்ளன.
ஜூவல் ஹவுஸ் கண்காட்சியில் முதன்முறையாக சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் உட்பட சில விலையுயர்ந்த பொருட்களின் தோற்றத்தைப் பற்றிய வரலாறு குறித்த தகவல்கள் இடம்பெறவுள்ளன.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்காட்சியில் செய்யப்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றமாக இந்நடவடிக்கை பார்க்கப்படுகின்றது.
லண்டன் டவரின் குடியுரிமை ஆளுநரான ஆண்ட்ரூ ஜாக்சன், ‘இந்த அற்புதமான சேகரிப்பைப் பற்றிய சிறந்த புரிதலை இந்த முயற்சி வழங்கும்’ என்று நம்புவதாகக் தெரிவித்துள்ளார்.