ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு ஆஸ்திரேலியர்களின் நிதி அழுத்தம் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
ஏறக்குறைய 3500 பேரின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், ஒவ்வொரு 04 பேரில் ஒருவர் வருமான ஆதாரங்கள் குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 2020 இல், வாரத்திற்கு சராசரி வேலை நேரங்களின் எண்ணிக்கை 21.9 ஆக இருந்தது, ஆனால் அது இப்போது 22.6 ஆக அதிகரித்துள்ளது.
எனினும் கடந்த 6 மாத கால செலவை விட 3.1 சதவீதம் வருமானம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 2020 இல், சராசரி குடும்பத்தின் வார வருமானம் 1800 டாலர்களாக இருந்தது. ஆனால் தற்போது அது 1629 டாலர்களாக குறைந்துள்ளது.