கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது.
இதையடுத்து, அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட அமேசான் நிறுவனமும் கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது.
இந்நிலையில், அமேசான் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த வாரம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இவற்றில் பெரும்பாலான ஊழியர்கள் விளம்பரப்பிரிவு மற்றும் இதர பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பு அமேசான் நிறுவன ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
நன்றி தமிழன்