எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு ஆஸ்திரேலிய இளைஞர்கள் அடிமையாகி இருப்பது குறித்து சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், வழக்கமான சிகரெட்டைப் பயன்படுத்துவதை விட்டுவிட எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை நாடுவதாகச் சிலர் கூறுவது முற்றிலும் தவறானது என்று தெரியவந்துள்ளது.
மாறாக வழக்கமான சிகரெட்டுகளை மட்டுமின்றி எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் மீது இளைஞர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முதலாவதாக, எலக்ட்ரானிக் சிகரெட்டைப் பயன்படுத்த ஆசைப்படும் இளைஞர்கள் வழக்கமான சிகரெட்டுகளுக்கு திரும்புவதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பெரியவர்களுக்கான எலக்ட்ரானிக் சிகரெட் விதிமுறைகளை தளர்த்தவும், இளைஞர்களுக்கான விதிகளை கடுமையாக்கவும் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.