ஆஸ்திரேலியர்களை குறிவைத்து ஆன்லைன் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளம் மூலம் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் ஆஸ்திரேலியர்கள் பேஸ்புக்கிற்கு ஈர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கசினோ நிறுவனம் ஒன்றினால் இந்த மோசடி இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் முன்னரும் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த கசினோ நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட சட்ட நிறுவனம் என்பதனால் இது தொடர்பில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என பேஸ்புக்கிற்கு சொந்தமான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், தான் அங்கீகரிக்கும் விளம்பரங்களுக்கு பொறுப்பேற்பது பேஸ்புக்கின் பொறுப்பு என்று ஆஸ்திரேலியாவின் மத்திய அரசு தெரிவிக்கிறது.