மத்திய அரசின் வீட்டு வசதி நிதிக்கு ஒதுக்கப்பட்ட தொகையை உயர்த்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆண்டுக்கு 500 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படும் இந்த 10 பில்லியன் டாலர் நிதியின் மூலம், புதிய சமூக பாதுகாப்பு வீடுகள் கட்டப்பட்டு, பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் மேம்படுத்தப்படும்.
முதல் 5 ஆண்டுகளில் 20,000 வீடுகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 4,000 வீடுகளும், முன்னணி ஊழியர்களுக்கு 10,000 வீடுகளும் ஒதுக்கப்படும்.
எவ்வாறாயினும், இந்த ஏற்பாடுகள் போதாது எனவும் அரசாங்கத்தின் இலக்கு வெற்றியடையாது எனவும் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து மத்திய அரசுக்கு பலமுறை தெரிவித்தும், திருப்திகரமான பதில் கிடைக்காததால், அந்த முன்மொழிவை ஆதரிக்க முடியாது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.