பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் வாக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசுக்கும் லிபரல் கூட்டணிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்க்கட்சிகளின் சில முன்மொழிவுகளை உள்ளடக்கி அதற்கான சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க ஆளும் கட்சி தயாராகி வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் வாக்கெடுப்பை நடத்த தொழிற்கட்சி திட்டமிட்டுள்ளது.
ஆனால், தேசிய கட்சி ஏற்கனவே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.