Breaking Newsநீண்ட கால கொரோனா பாதிப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நீண்ட கால கொரோனா பாதிப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

-

கொரோனா தொற்று ஏற்பட்டு சில வாரங்களில் பெரும்பாலானோர் குணமடைந்து விடுகின்றனர். ஆனால் சிலருக்கு 4 முதல் 12 வாரங்கள் வரை அல்லது அதற்கு பிறகும் கூட நோயின் அறிகுறிகள் நீடிக்கும். 

இவற்றை ‘நீண்ட (லாங்) கோவிட்’ என அழைக்கின்றனர். இதுபோன்ற நீண்ட கோவிட் பாதிப்புகள் சிலருக்கு முகம் குருட்டு தன்மை (புரோசோ பக்னோசியா) என்ற நரம்பியல் கோளாறை ஏற்படுத்தலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதனால் முகங்களை அடையாளம் காண இயலாமல் போகலாம். இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர்.

இதில் நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட 54 பேரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அதில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நரம்பியல் கோளாறு பிரச்சனை இருப்பதாக தெரிவித்தனர். 

ஆய்வில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அன்னி என்ற 28 வயது பெண்ணுக்கு நரம்பியல் கோளாறு கண்டறியப்பட்டது. 

அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு முகங்களை அடையாளம் காண்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தொற்றால் பாதிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்த பிறகும் அவருக்கு தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை கூட அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். 

கார்டேக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் சில தனி நபர்கள் நீண்ட கோவிட் காரணமாக சிரமங்களை உருவாக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – Meta நிறுவனம் மீது விசாரணை

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை அமைத்திருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், Meta நிறுவனம் அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைகளை...

சர்ச்சைக்குரிய முழக்கத்தை தடை செய்ய தயாராகும் NSW

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, பொது இடங்களில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் பயன்படுத்தப்படும் "Globalise the Intifada" என்ற முழக்கத்தைப் பயன்படுத்துவதைத்...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...

Casey தெருக்களில் பார்க்கிங் தொடர்பான சிறப்பு அறிவிப்பு

Casey நகரில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தெரு தனியார் சொத்து அல்ல என்றும், அந்த இடத்தில் உங்களுக்கு எந்த சிறப்பு உரிமையும் இல்லை என்றும்...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம்

வெளிநாட்டு விடுமுறையிலிருந்து திரும்பும் சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தட்டம்மை பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரம் எச்சரிக்கிறது. டிசம்பர் 1 முதல், சிட்னி...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...