Sportsஒருநாள் உலகக் கிண்ணத்தை இந்த அணிதான் வெல்லும் - பிரெட் லீ...

ஒருநாள் உலகக் கிண்ணத்தை இந்த அணிதான் வெல்லும் – பிரெட் லீ கருத்து

-

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக் கிண்ண தொடரானது நடைபெறவுள்ளது.

இந்த உலகக் கிண்ணத்தை வெல்வதற்காக தற்போது அனைத்து அணிகளும் முழுஅளவில் தயாராகி வருகின்றன.

13-வது முறையாக நடைபெறவுள்ள இந்த 50 ஓவர் உலகக் கிண்ணத்தை அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி-யின் 50 உலகக் கிண்ண தொடரானது நடைபெற்றது.

அதில் 2011-ஆம் ஆண்டு தோனியின் தலைமையிலான இந்திய அணி கிண்ணத்தை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பல ஐசிசி தொடர்களை இந்திய அணி இழந்த வேளையில் தற்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்காக முனைப்பு காட்டி வருகின்றது.

மேலும் இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இந்த அனைத்து தொடர்களிலும் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கணிப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகக் கிண்ணத்தை இந்திய அணிதான் வெல்லும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிரட் லீ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கிண்ணத்தை கைப்பற்ற இந்திய அணிக்கு தான் வாய்ப்பு அதிகம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தற்போது மிகச் சிறப்பான அணியாக உள்ளது. அந்த அணியில் அனுபவமும் இளமையும் கலந்துள்ளது. அதுமட்டும் இன்றி இந்திய மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது சவாலான காரியம்.

இங்குள்ள மைதானங்கள் அனைத்தும் இந்திய அணிக்கு ரொம்பவே பழக்கப்பட்டவை என்பதனால் இந்திய அணிக்கு இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்பு என்று எந்தவித தயக்கமும் இன்றி பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...