Newsசமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

-

அமெரிக்க உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. 

அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. 

அதனையடுத்து அங்குள்ள உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவுக்கு கவர்னர் ஸ்பென்சர் காக்ஸ் ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை வைத்திருக்க அவர்களது பெற்றோர் அவசியம் சம்மதிக்க வேண்டும். மேலும் அவர்களது கணக்கை பெற்றோர் முழுவதும் அணுகும் வகையில் இருக்க வேண்டும். 

முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் செய்திகளை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்வேறு அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

இந்த சட்டம் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க உதவும் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

மனித மூளையை கொல்லும் டிஜிட்டல் திரை – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஒரு நாளைக்கு அதிக நேரம் டிஜிட்டல் திரைகளில் செலவிடுவது ஒரு நபரின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இது மூளையின் செயல்பாடு...

விக்டோரியாவில் ரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ள பிரபலமான இசை விழா

விக்டோரியா மக்களிடையே பிரபலமான இசை விழாவாகக் கருதப்படும் "Esoteric Music Festival" நடத்துவது தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த முறை மார்ச் 7 முதல் 11...

விக்டோரியர்களுக்கு எதிர்காலத்தில் எளிதாகிவிடும் விமானப் பயணம்

விக்டோரியாவில் உள்ள பல பிராந்திய விமான நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு மேலும் 4.5 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிராந்திய விமான...

விக்டோரியாவில் அதிகரித்துள்ள சர்வதேச மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்

விக்டோரியன் பள்ளிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் முழுநேர பாடநெறி கட்டணம் 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தரவு அறிக்கையை ஆஸ்திரேலிய...

விக்டோரியாவில் அதிகரித்துள்ள சர்வதேச மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்

விக்டோரியன் பள்ளிகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தும் முழுநேர பாடநெறி கட்டணம் 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தரவு அறிக்கையை ஆஸ்திரேலிய...

மருத்துவ ரீதியாக கஞ்சா பயன்படுத்தும் விக்டோரியர்களுக்கு ஒரு நற்செய்தி

விக்டோரியா மாநிலத்தில் மருத்துவ கஞ்சாவைப் பயன்படுத்தும் நோயாளிகள் சிறப்பு நிவாரணத்திற்குத் தகுதியுடையவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் முதலாம் திகதி முதல், மருத்துவ நிலைமைகளுக்காக மருத்துவ...