பகல் சேமிப்பு முறை முடிவடைந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை (02) முதல் ஒரு மணி நேரம் நேரம் பின்வாங்கப்படும்.
இதன்படி, மேற்கு அவுஸ்திரேலியா – வடக்கு பிரதேசம் மற்றும் குயின்ஸ்லாந்து தவிர்ந்த ஏனைய அனைத்து மாநிலங்களிலும் தற்போதைய நேரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலை 03 மணி முதல் ஒரு மணித்தியாலத்தினால் பின்னுக்குத் தள்ளப்படும்.
மொபைல் போன்கள் – கணினிகள் – கைக்கடிகாரங்கள் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் தானாகவே நேரத்தை மாற்றிவிடும், ஆனால் சுவர் கடிகாரங்கள் போன்ற சாதனங்கள் மாற்றப்பட வேண்டும்.
இந்த திருத்தங்கள் நியூ சவுத் வேல்ஸ் – விக்டோரியா – தெற்கு ஆஸ்திரேலியா – டாஸ்மேனியா மற்றும் ACT ஆகிய மாநிலங்களுக்கு அமலுக்கு வரும்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பகல் சேமிப்பு முறை 1992 இல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்ட பிறகு செயல்படுத்தப்படவில்லை.
பகல் சேமிப்பு பகுதிகள்
நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம் – நார்போக் தீவு
செயல்படாத பகுதிகள்
குயின்ஸ்லாந்து, வடக்குப் பகுதி, மேற்கு ஆஸ்திரேலியா, கிறிஸ்துமஸ் தீவு அல்லது கோகோஸ் (கீலிங்) தீவுகள்