Sports16 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம் - IPL...

16 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம் – IPL 2023

-

உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் இண்டியன் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியுடன் இன்று 31-ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டி அஹமதாபாத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்ஹி கெப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ், மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய பத்து அணிகள் பங்குபற்றுகின்றன.

நான்கு வருடங்களின் பின்னர் பழைய முறைமைப்படி சகல அணிகளும் சொந்த மைதானத்திலும், அந்நிய மைதானத்திலும் ஒன்றையொன்று எதிர்த்தாடும் வகையில் எல்பிஎல் சுற்றுப் போட்டி நடைபெறவிருக்கிறது.

மார்ச் 31-ம் திகதி ஆரம்பமாகி எட்டு வாரங்கள் தொடரும் 16ஆவது எல்பிஎல் அத்தியாயத்தில் 74 போட்டிகள் 12 மைதானங்களில் நடைபெறவுள்ளன.

கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக கடைசி 3 அத்தியாயங்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய மைதானங்களிலேயே நடத்தப்பட்டன. 

2020இல் இந்தியாவுக்கு வெளியே ஐக்கிய அரபு இராச்சியத்தில் முழுப் போட்டியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து 2021இல் ஆரம்பப் போட்டிகள் இந்தியாவின் சில மைதானங்களிலும் கடைசிப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் அரங்கேறின. 

2022இல் லீக் போட்டிகள் மும்பை, புனே ஆகிய மைதானங்களிலும் இறுதிச் சுற்று கொல்கத்தா, அஹமதாபாத் மைதானங்களிலும் நடத்தப்பட்டன.

இருபது 20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் கிண்ணஸ் சாதனையை ஏற்படுத்தும் வகையில் அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் 101,556 இரசிகர்கள் 2022 இறுதிப் போட்டியைக் கண்டுகளித்தனர்.

அந்த இறுதிப் போட்டியில் முதலாவது எல்பிஎல் சம்பியன் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை முற்றிலும் எதிர்பாராத விதமாக 7 விக்கெட்களால் வெற்றிகொண்ட ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் சம்பியனாகியிருந்தது.

குஜராத் டைட்டன்ஸ் தனது அறிமுக அத்தியாயத்திலேயே சம்பியனானது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

போட்டி முறைமை

2023 ஐபிஎல் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் பத்து அணிகளும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளை சொந்த மைதானத்திலும் 7 போட்டிகளை அந்நிய மைதானத்திலும் விளையாடவேண்டும்.

10 அணிகளும் 2 குழுக்களாக வகுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒரு குழுவில் இடம்பெறும் அணிகள் ஒன்றையொன்று சொந்த மண்ணிலும் அந்நிய மண்ணிலும் 2 தடவைகள் எதிர்த்தாடும். அதாவது ஒவ்வொரு அணியும் தத்தமது குழுவில் 8 போட்டிகளில் விளையாடும். அதேவேளை மற்றைய குழுவில் இடம்பெறும் 4 அணிகளை ஓரு தடவையும் எஞ்சியிருக்கும் அணியை 2 தடவைகளும் எதிர்த்தாடும்.

இறுதிச் சுற்று 4 போட்டிகளைக் கொண்டதாகும்.லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் முதலாவது தகுதிகாண் சுற்றில் விளையாடும். அதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

அணிகள் நிலையில் 3ஆம், 4ஆம் இடங்களைப் பெறும் அணிகள் நீக்கல் போட்டியில் விளையாடும். நீக்கல் போட்டியில் வெற்றிபெறும் அணி முதலாவது தகுதிகாணில் தோல்வி அடைந்த அணியை 2ஆவது தகுதிகாண் போட்டியில் சந்திக்கும்.

இரண்டாவது தகுதிகாண் போட்டியில் வெற்றிபெறும் அணி, முதலாவது தகுதிகாண் போட்டியில் வெற்றியீட்டிய அணியை 16ஆவது ஐபிஎல் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் எதிர்த்தாடும்.

அணித் தலைவர்கள்

சென்னை சுப்பர் கிங்ஸ்: மஹேந்த்ர சிங் தோனி

டெல்ஹி கெப்பிட்டல்ஸ்: டேவிட் வோர்னர்

குஜராத் டைட்டன்ஸ்: ஹார்திக் பாண்டியா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பதில் தலைவர் நிட்டிஷ் ரானா (வழமையான அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் உபாதையிலிருந்து மீளவில்லை)

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ்: கே. எல். ராகுல்

மும்பை இண்டியன்ஸ்: ரோஹித் ஷர்மா

பஞ்சாப் கிங்ஸ்: ஷிக்கர் தவான்

ராஜஸ்தான் றோயல்ஸ்: சஞ்சு செம்சன்

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்: பவ் டு ப்ளெசிஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஏய்டன் மார்க்ராம்.

Latest news

Bondi தாக்குதலுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு மிரட்டல்

Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.  Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15...

87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர்

சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கு குழந்தை பிறந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 87...

City Beach-இற்கு $14 மில்லியன் அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலியாவில் பிரபலமான Surf சில்லறை விற்பனையாளரான City Beach, பட்டன் பேட்டரி பாதுகாப்பு தரநிலைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக City Beachஇற்கு 14 மில்லியன் டாலர்...

Link Shareகளுக்கு பணம் வசூலிக்க Metaவின் புதிய முடிவு

Facebook பயனர்கள் ஒரு பதிவில் பகிரக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த Meta ஒரு புதிய பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இணைப்புகள் மூலம் கூடுதல் தகவல்களை இடுகையிடுவது பயனர்களுக்கு கூடுதல்...

City Beach-இற்கு $14 மில்லியன் அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலியாவில் பிரபலமான Surf சில்லறை விற்பனையாளரான City Beach, பட்டன் பேட்டரி பாதுகாப்பு தரநிலைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக City Beachஇற்கு 14 மில்லியன் டாலர்...

Link Shareகளுக்கு பணம் வசூலிக்க Metaவின் புதிய முடிவு

Facebook பயனர்கள் ஒரு பதிவில் பகிரக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த Meta ஒரு புதிய பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இணைப்புகள் மூலம் கூடுதல் தகவல்களை இடுகையிடுவது பயனர்களுக்கு கூடுதல்...