Newsஜப்பான் நாட்டில் 26 மாகாணங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பறவை காய்ச்சல்

ஜப்பான் நாட்டில் 26 மாகாணங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பறவை காய்ச்சல்

-

ஜப்பானின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. 

நாட்டில் உள்ள 47 மாகாணங்களில் 26 மாகாணங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஹொக்கைடோ மாகாணத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் நேற்று முன்தினம் நிறைய கோழிகள் உயிரிழந்துள்ளன.

அதை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கோழிகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது. 

இதையடுத்து ,பண்ணையில் இருந்து மாகாணத்தின் பிற பகுதிகளுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க பண்ணையில் உள்ள 5 லட்சத்து 58 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ஜப்பானில் பறவை காய்ச்சல் காரணமாக 1 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

ANU மனநல மருத்துவமனையில் கத்தியால் குத்திய சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) இரண்டு மாணவர்களை கத்தியால் கடுமையாக காயப்படுத்திய 26 வயதான Alex Ophel-ஐ, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான மனநல மருத்துவமனையில் அடைக்க...

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

சிட்னியின் தென்மேற்கில் ஏழு பேரை ஆயுதமேந்திய போலீசார் கைது

சிட்னியின் தென்மேற்கில் நடந்த ஒரு வியத்தகு நடவடிக்கையில், கனரக ஆயுதமேந்திய காவல்துறையினரால் ஏழு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். "ஒரு வன்முறைச் செயல் திட்டமிடப்பட்டிருக்கலாம்" என்று தங்களுக்குத் தகவல்...

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...