Sportsஉலக சாம்பியன் மெஸ்ஸிக்கு உருவச் சிலை வடிவமைப்பு

உலக சாம்பியன் மெஸ்ஸிக்கு உருவச் சிலை வடிவமைப்பு

-

கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்தாட்ட உலக கிண்ணத்தை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்று கிண்ணத்தை கைப்பற்றியது.

1978, 1986-க்குப் பிறகு அர்ஜென்டினா அணி வென்ற 3-வது உலக கிண்ணம் இதுவாகும். மெஸ்ஸி முதல்முறையாக உலக கிண்ணத்தை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது.

உலக கிண்ணம் 2022 தொடரில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகின்றது.

இந்த நிலையில், உலக சாம்பியன் மெஸ்ஸிக்கு , தென் அமெரிக்க கால்பந்தாட்ட கூட்டமைப்பு சார்பில் மெஸ்ஸியின் முழு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி, கையில் உலக கிண்ணத்தை தாங்கி நிற்பது போல இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மெஸ்ஸி பங்கேற்றுள்ளார்.

மெஸ்ஸி சிலையை தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அருங்காட்சியகத்தில் கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு அருகில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...