Sportsமுதல் போட்டியில் சென்னையை வீழ்த்தியது குஜராத் - IPL 2023

முதல் போட்டியில் சென்னையை வீழ்த்தியது குஜராத் – IPL 2023

-

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அகமதாபாத்தில் கோலாகலமாக ஆரம்பமான 2023ஆம் ஆண்டின் 16 ஆவது IPL தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 178 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள் அடங்களாக 92 ஓட்டங்களைப் பெற்றார்.

வெற்றிபெற 179 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் குஜராத் துடுப்பாட ஆரம்பித்தது.

சுப்பன் கில் 36 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்று சிறந்த ஆரம்பத்தை வழங்கினார்.

இறுதியாக ஒரு ஓவரில் 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் குஜராத் இருந்தது.

இதன்போது தேஸ்பண்டே முதல் பந்தை அகலப்பந்தாக வீசினார்.

அடுத்த இரண்டு பந்துகளுக்கும் முகம் கொடுத்த தெவேசியா ஒரு சிக்ஸர் மற்று ஒரு பவுண்டரி அடித்து குஜராத்துக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை தோல்வி அடைந்தது. 

நன்றி தமிழன்

Latest news

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – Meta நிறுவனம் மீது விசாரணை

குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்தும் வகையில் தளங்களை அமைத்திருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், Meta நிறுவனம் அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைகளை...

சர்ச்சைக்குரிய முழக்கத்தை தடை செய்ய தயாராகும் NSW

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, பொது இடங்களில் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் பயன்படுத்தப்படும் "Globalise the Intifada" என்ற முழக்கத்தைப் பயன்படுத்துவதைத்...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...

Casey தெருக்களில் பார்க்கிங் தொடர்பான சிறப்பு அறிவிப்பு

Casey நகரில் உங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள தெரு தனியார் சொத்து அல்ல என்றும், அந்த இடத்தில் உங்களுக்கு எந்த சிறப்பு உரிமையும் இல்லை என்றும்...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம்

வெளிநாட்டு விடுமுறையிலிருந்து திரும்பும் சுற்றுலாப் பயணிகளால் சிட்னியில் தட்டம்மை பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரம் எச்சரிக்கிறது. டிசம்பர் 1 முதல், சிட்னி...

விக்டோரியாவில் வணிகங்களை கடுமையாகப் பாதிக்கும் சாலை மேம்பாட்டுத் திட்டம்

பக்கென்ஹாம் பகுதியில் உள்ள Bald Hill சாலையில் நடந்து வரும் Big Build Victoria சாலை பழுதுபார்ப்பு காரணமாக ஒரு சிறு வணிகம் மூட வேண்டிய...