பிரான்ஸின் மேற்கு பகுதியில் உள்ள நாண்டஸ் நகரத்தில் செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பால் ஆலயங்கள் அமைந்துள்ளன.
இந்த கிறிஸ்தவ ஆலயங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ருவாண்டன் இம்மானுவேல் என்பவர் தீ வைத்துள்ளார். இதில் அந்த ஆலயங்களின் பெரும்பகுதிகள் சேதமடைந்தன.
இந்த வழக்கின் விசாரணை இடம்பெற்று முடிந்த நிலையில், தற்போது இம்மானுவேல் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ளது.
எனவே ,அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், நாண்டஸ் நகரில் வசிப்பதற்கும் இவருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழன்