மெல்போர்னின் புகழ்பெற்ற கிரவுன் கேசினோவில் விளையாட வருபவர்களுக்கு விக்டோரியா மாநில அரசு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ஒருவர் தொடர்ச்சியாக 03 மணித்தியாலங்கள் விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தால், அவர் கட்டாயமாக 15 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும்.
ஒரு நாளில் 12 மணி நேரத்திற்கு மேல் விளையாடியிருந்தால், 24 மணி நேர ஓய்வு கட்டாயம்.
மேலும், ஒரு வாரத்தில் விளையாடக்கூடிய அதிகபட்ச நேரம் 36 மணிநேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் கிரவுன் கேசினோக்கள் மீதான விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டவை.
இந்த விதிமுறைகளை மீறும் எவரையும் கிரவுன் வளாகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றும் கூடுதல் அதிகாரங்கள் அதன் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது சிறப்பு.
சமீபத்திய செய்திகள் 8694செய்தி 9426