Sportsசன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றி - IPL...

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றி – IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ,ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொண்டது. 

முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை குவித்தது.

அபாரமாக விளையாடிய யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் தலா 54 ஓட்டங்களை குவித்து வலுவான அடித்தளம் அமைத்தனர். அணித்தலைவர் சஞ்சு சாம்சன் 55 ஓட்டங்களை விளாசினார். 

இதையடுத்து 204 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. 

முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. துவக்க வீரர் அபிஷேக் சர்மா, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி ஆகிய இருவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

அதன்பின்னர் மயங்க் அகர்வால், ஹாரி ப்ரூக் ஜோடி சற்று நேரம் தாக்குப்பிடித்தது. இந்த ஜோடியை சாகல் பிரித்தார். ஹாரி ப்ரூக் 13 ஓட்டத்தில் வெளியேறினார். 

வாஷிங்டன் சுந்தர் (1), கிளென் பிலிப்ஸ் (8) ஆகியோரும் விரைவில் விக்கெட்டை இழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால், 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 52 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 முக்கிய விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அணி தோல்வியை நோக்கி பயணித்தது. 

அடில் ரஷித் (18), அணித்தலைவர் புவனேஸ்வர் குமார் (6), அப்துல் சமது (32 நாட் அவுட்), உம்ரான் மாலிக் (19 நாட் அவுட்), ஆகியோரின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்களை எடுத்தது. 

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. யுஸ்வேந்திர சாகல் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டிரென்ட் போல்ட் 2 விக்கெட், ஹோல்டர், அஷ்வின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

நன்றி தமிழன்

Latest news

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை உயர்வு

சீனாவின் மலைப்பகுதியான திபெத் பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் 130...

2025-இல் முக்கிய வங்கிகளின் பண விகிதத்தில் ஏற்படும் மாற்றம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் 2025 ஆம் ஆண்டிற்கான பண விகிதத்தில் ஏற்படும் மாற்றம் குறித்த தங்கள் கணிப்புகளை வழங்கியுள்ளன. NAB குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ...

Dandenong-இல் கண்டெடுக்கப்பட்ட இனந்தெரியாத ஒருவரின் சடலம்

நேற்று காலை 9.40 மணியளவில் அவசர சேவைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி,Dandenong-ல் உள்ள வீடு ஒன்றில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. Dandenongல் உள்ள McCrae St.-...

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. LinkedIn's Jobs on the Rise அறிக்கைகள் ஆஸ்திரேலியா முழுவதும் மிகவும் தேவைப்படும்...

இளைஞர்கள் அதிகமுள்ள நகரம் எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் அதிக இளைஞர்கள் வசிக்கும் தலைநகரமாக டார்வின் காணப்படுகின்றது. மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவர பணியகத்தின் தரவுகளின்படி, 35 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக டார்வின்...

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைகள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. LinkedIn's Jobs on the Rise அறிக்கைகள் ஆஸ்திரேலியா முழுவதும் மிகவும் தேவைப்படும்...