அரசாங்க விவகாரங்கள் தொடர்பான மொபைல் போன்களில் TikTok செயலியை தடை செய்யும் ஆஸ்திரேலிய மத்திய அரசின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயல் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்தார்.
அரசாங்க மட்டத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்களை நசுக்கும் ஆஸ்திரேலிய அரசின் முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவுக்குச் சொந்தமான டிக்டாக் செயலியை அரசு தொலைபேசிகளில் இருந்து தடை செய்த 5வது நாடாக ஆஸ்திரேலியா சமீபத்தில் மாறியது.