Newsகுருவியை பறக்கவிட்ட எலான் மஸ்க்

குருவியை பறக்கவிட்ட எலான் மஸ்க்

-

 எலான் மஸ்க் கடந்த வருடம் ஒக்டோபரில் 44 பில்லியன் டொலருக்கு ட்விட்டரை வாங்கியதிலிருந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளார். “நீல நிற குருவிக்கு பதில் நாய்” லோகோவாக மாற்றப்பட்டுள்ளது.

ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது. Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது. நகைச்சுவையாக பணம் செலுத்தும் முறையை உருவாக்கமென்பொருள் பொறியாளர்களான பில்லி மார்கஸ் மற்றும் ஜாக்சன் பால்மர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட Dogecoin கிரிப்டோகரன்சி முறையை எலான் மஸ்க் நீண்ட காலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் லோகோ மாற்றப்பட்டதால் Doge coin கிரிப்டோகரன்சியின் மதிப்பு 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் செயலியின் லோகோ திடீரென மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...