Sportsராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி- IPL 2023

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி- IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மோதின. 

அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங், அணித்தலைவர் ஷிகர் தவான் இருவரும் அபாரமாக துடுப்பெடுத்தாடி வலுவான அடித்தளம் அமைத்தனர். 

இந்த ஜோடி 90 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. பிரப்சிம்ரன் சிங் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பனுகா ராஜபக்ச ஒரு ஓட்டம் எடுத்திருந்த நிலையில் காயமடைந்து வெளியேறினார்.

இதையடுத்து, ஷிகர் தவானுடன் ஜிதேஷ் சர்மா இணைய, மீண்டும் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. ஜிதேஷ் 27 ஓட்டம் சேர்த்த நிலையில், விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த சிக்கந்தர் ரசா ஒரு ஓட்டத்திலும் ஷாருக் கான் 11 ஓட்டத்திலும் அவுட் ஆக, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டம் குவித்தது.

ஷிகர் தவான் 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 86 ஓட்டம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் கைப்பற்றினார்.

அஷ்வின், சாகல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ஷிம்ரான் ஹெட்மியர் 36 ஓட்டங்கள், துருவ் ஜூரல் 32 ஓட்டங்களும், தேவ்தத் படிக்கல் 21 ஓட்டங்கள், ரியான் பராக் 20, ஜோஸ் பட்லர் 19 ஓட்டங்கள், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 11 ஓட்டங்களும் எடுத்தனர். இதில், ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் துருவ் ஆட்டமிழக்கவில்லை.

இந்நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இதன்மூலம் பஞ்சாப் அணி 5 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

Latest news

ஒரு வருடத்திற்கு TikTok வேண்டாம் என்று கூறும் ஒரு நாடு

அல்பேனியா ஒரு வருடத்திற்கு TikTok அணுகலை தடை செய்ய முடிவு செய்துள்ளது. டிக்டோக்கினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அல்பேனியாவில் கடந்த...

விக்டோரியாவில் கட்டுப்பாட்டை இழந்த காட்டுத்தீ – பொதுமக்களுக்கு சிவப்பு அறிவிப்பு

விக்டோரியாவில் வசிப்பவர்கள் கிறிஸ்துமஸ் தினத்திலும், Boxing Day தினத்திலும் கடுமையான காட்டுத் தீயை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிராமியன்ஸ் தேசிய பூங்கா பகுதியில்...

அதிக விடுமுறைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

2025 ஆம் ஆண்டில், உலகில் அதிக விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளன. CN டிராவலர் வழங்கிய அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் உலகில்...

விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி

தெற்கு பிரேசிலில் உள்ள கிராமடோ நகரில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தின் பைலட்டாக இருந்த பிரேசில் தொழிலதிபர் லூயிஸ்...

விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி

தெற்கு பிரேசிலில் உள்ள கிராமடோ நகரில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தின் பைலட்டாக இருந்த பிரேசில் தொழிலதிபர் லூயிஸ்...

ஆஸ்திரேலியாவில் Protection Visa மோசடி செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

Protection Visa (Subclass 866) தொடர்பாக ஆஸ்திரேலியாவில் மோசடி செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் மீண்டும்...