மது விற்பனை தொடர்பான சட்டங்களை மாற்ற மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு தயாராகி வருகிறது.
தற்போதுள்ள சட்டங்களின்படி, ஹோட்டல்-சத்திரங்கள் மற்றும் பல உணவகங்களில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு மது விற்க முடியும்.
மேலும், சாப்பாட்டுடன் மட்டுமே மதுவை வழங்க முடியும் என்ற கட்டாயச் சட்டம் உள்ளது.
மேலும், புனித வெள்ளி, கிறிஸ்துமஸ் போன்ற விசேஷ நாட்களில் மது விற்பனை செய்வது தொடர்பாக மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.
இந்தச் சட்டங்களில் சில காலாவதியான விதிமுறைகள் என்றும், தற்காலத்துக்கு ஏற்ற வகையில் தளர்த்தப்பட வேண்டும் என்றும் பல தரப்பினர் விடுத்த கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு மதுபானச் சட்டங்களைத் திருத்தத் தயாராகி வருகிறது.