Newsஉலகில் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் ஷாருக்கான் முதலிடம்

உலகில் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் ஷாருக்கான் முதலிடம்

-

பொலிவுட் சினிமாவில் “கிங்” கான் ஆகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரின் நடிப்பில் தற்போது ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகின்றது.

அட்லீ இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில் ஜூன் 2-ஆம் திகதி படத்தை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க டைம்ஸ் பத்திரிகை வாசகர்களின் கருத்துக்கணிப்பின்படி தற்போது செல்வாக்குமிக்க டொப் 100 நபர்களுக்கான வாக்கெடுப்பில் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அதாவது 2023-ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் நடிகர் மைக்கேல் யோ, தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்ற பலரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் மொத்தம் பதிவான 1.2 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் மட்டும் 4% வாக்குகளைப் பெற்றதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து ஷாருக்கானுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் வரவிருக்கும் ஒரு பெரிய வீட்டுவசதி திட்டம்

நாடு முழுவதும் மேலும் எழுபதாயிரம் வீடுகளைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக விக்டோரியன் அரசு கூறுகிறது. பிரதமர் ஜெசிந்தா ஆலன் மற்றும் Rail Loop திட்ட அமைச்சர் நேற்று அந்த...

இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்படும் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ்

விக்டோரியாவின் நடமாடும் தீவிர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவைகள் இன்று முதல் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய தீவிர சிகிச்சை ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடர்ந்து, ஊழியர்கள் இன்று தங்கள் பணியைத்...

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

அவசரமாகத் தரையிறக்கப்பட்ட பெர்த் நோக்கிச் சென்ற விமானம்

பெர்த் நோக்கிச் சென்ற குவாண்டாஸ் விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் காக்பிட்டில் ஏற்பட்ட புகையே விபத்துக்குக் காரணம் என்று விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. QF643 விமானம்...

தள்ளுபடிகள் காரணமாக மெல்பேர்ண் கடையில் நீண்ட வரிசைகள்

மெல்பேர்ணில் உள்ள ஒரு தள்ளுபடி கடையில் நீண்ட வரிசையில் ஒரு பெரிய கூட்டம் வரிசையில் நிற்பதாகக் கூறப்படுகிறது. மெல்பேர்ணில் உள்ள Panda Mart கடையில் நீண்ட வரிசையில்...