Sportsஉலக சாதனை படைத்த நீச்சல் வீரர்!

உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்!

-

எகிப்து நாட்டை சேர்ந்த நீச்சல் வீரர் ஷேகப் அல்லாம் என்பவர் கையில் விலங்கோடு 11 கிலோமீற்றர் தூரம் நீந்தி சென்று உலக சாதனை படைத்துள்ளார். 

அவர் சரியாக 6 மணி நேரத்தில் 11.649 கிலோமீற்றர் தூரம் நீந்தி சென்று உலக சாதனை படைத்துள்ளார்.

அரேபிய நாட்டில் நடைபெற்ற திறந்த வெளி நீச்சல் போட்டியில் பங்கு பெற்ற ஷேகப் அல்லாம் கையில் விலங்கு பூட்டிக் கொண்டு நீந்தும் போது உதவி படகுகள் தன்னை பின் தொடர மறுத்துவிட்டார்.

போட்டிக்காக பயிற்சி செய்யும் போது நான் கைவிலங்கு அணிந்து நீந்துவதைப் பார்க்க கூட்டம் கூடிவிடும். இதனால் நான் அமைதியான பகுதிகளில் நீந்த விரும்புகிறேன், பொதுவாக கடற்கரைகளின் ஓரங்களில் நான் பயிற்சி எடுத்துக்கொள்வேன் என ஊடகவியலாளர்களிடம் ஷேகப் தெரிவித்துள்ளார்.

போட்டியை முடித்து சான்றிதழை கையில் வாங்கும் வரை என்னால் எதைப் பற்றியும் சிந்திக்க முடியவில்லை. தற்போது உலக சாதனை படைத்த நீச்சல் வீரராக இருப்பது பெருமையாகவுள்ளது. 

என்னால் முடிந்த வரை இந்த சாதனையை தக்க வைக்க முயல்வேன் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கின்னஸ் சாதனை அமைப்பு தெரிவிக்கையில்,

6 மணி நேரத்தில் ஷேகப் அல்லாம் அவரால் படைக்கப்பட்ட இச்சாதனை அசாத்தியமானது. இவரது சாதனை உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். 

இதன் மூலம் மனித சக்தியால் முடியாதது ஒன்றுமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது’ என கூறியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Social Houses மீது ஆர்வம் குறைவாக உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் மத்திய அரசால் 2023 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட Social Houses தொடர்பான தரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவு அறிக்கையை ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் நலன்புரி...

மெட்டா நிறுவனத்தின் கொள்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டம்

Facebook, Instagram மற்றும் Whatsapp உள்ளிட்ட வலைத்தளங்களை இயக்கி வரும் சமூக ஊடகங்களில் ஒன்றான Meta நிறுவனம் சமீபத்தில் அதன் கொள்கையில் சில மாற்றங்கள் பற்றிய...

ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமர் பற்றி வெளியான தகவல்

அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அடுத்த கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெறுவார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் கூட்டாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால், அவர்...

வார இறுதிக்கு தயாராகும் ஆஸ்திரேலியர்களுக்கான வானிலை அறிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குயின்ஸ்லாந்து மற்றும்...

வார இறுதிக்கு தயாராகும் ஆஸ்திரேலியர்களுக்கான வானிலை அறிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குயின்ஸ்லாந்து மற்றும்...

வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்கவேண்டிய விக்டோரியா பூங்காக்கள்

விக்டோரியாவின் மிகவும் கவர்ச்சிகரமான சில தேசிய பூங்காக்கள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் விக்டோரியாவில் வசிக்கிறீர்கள் என்றால், இந்த பூங்கா உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது...