தெற்கு ஆஸ்திரேலியாவில் பல பொது இடங்களில் புகைபிடித்தல் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதனால், பள்ளிகள் – வணிக வளாகங்கள் – பொது அலுவலகங்கள் – அரங்கங்கள் மற்றும் கடற்கரைகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட உள்ளன.
ஒவ்வொரு இடத்தையும் பொறுத்து 5 முதல் 10 மீட்டர் தூரம் வரை புகைபிடிப்பது தடைசெய்யப்படும்.
மதுபானசாலைகளில் சிகரெட் விற்பனை இயந்திரங்களை நிறுவுவதும் இடைநிறுத்தப்படவுள்ளதுடன், சிறார்களுக்கு சிகரெட் விற்பனை தொடர்பான அபராதத் தொகையை இரட்டிப்பாக்குவது முக்கிய யோசனையாகும்.
தற்போது அபராதம் 1200 டொலர்களாக உள்ள நிலையில் அதனை 2400 டொலர்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் – முதியோர் பராமரிப்பு மையங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் அருகே புகைபிடிப்பது தொடர்பாக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு தெரிவித்துள்ளது.