குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தற்போது பள்ளிகளில் மொபைல் போன் தடை இல்லாத ஒரே மாநிலம் குயின்ஸ்லாந்து.
கல்வி அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய முடிவு எடுப்பதாக அம்மாநில பிரதமர் தெரிவித்தார்.