வெப்ப மண்டல சூறாவளி என பெயரிடப்பட்ட இல்சா புயல் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.
இது 03 வகை புயலாக வலுவிழந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் தாக்கம் அடுத்த சில மணிநேரங்களில் மேலும் குறைந்து, அதன் பிறகு வடக்குப் பகுதி வழியாக ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறும்.
இல்சா புயல், மணிக்கு கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள புரூம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தது.
சேதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வரவில்லை.