சீனா நிலவில் கட்டிட கட்டுமான பணிகளை தொடங்க தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த பணியில் 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் விண்வெளி ஒப்பந்ததாரர்கள் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளதாக சீன ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சீனாவின் உகானில் விஞ்ஞானிகள் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாடு உகான் ஹவாசோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
மாநாட்டில் நிலவில் அதிக நாட்கள் தங்கி வாழ்வதன் சாத்தியக் கூறுகளை மட்டும் ஆராயாமல், நிலவில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தில் சீனா செயல்பட்டு வருவதாக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சீனா வெற்றி பெற்றால், நிலவில் தளம் அமைக்கும் முதல் நாடு என்ற பெருமையை சீனா பெறும். இதே விஷயம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.