ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் மக்கள் காத்திருக்க வேண்டிய காலம் இன்னும் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்கள் சில உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு காத்திருக்கும் நேரம் கிட்டத்தட்ட ஒரு வருடம் என்று காட்டுகின்றன.
இந்நிலைமையால் நோயாளிகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அறுவை சிகிச்சை தாமதம் குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இது மீண்டும் வலியுறுத்துகிறது.
இல்லை என்றால் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 5 இலட்சத்தை நெருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.