News14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி- IPL...

14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி- IPL 2023

-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின.

முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக அணித்தலைவர் ரோகித் சர்மா 28 ஓட்டங்கள், இஷான் கிஷன் 38 ஓட்டங்கள் சேர்த்தனர்.

அதன்பின் களமிறங்கிய கேமரான் கிரீன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டம் குவித்தார். மறுமுனையில் சூரியகுமார் யாதவ் 7 ஒட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அவரைத் தொடர்ந்து கேமரான் கிரீனுடன் இணைந்த திலக் வர்மா, ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

17 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 37 ஓட்டங்கள் விளாசிய நிலையில் அவர் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 16 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

மறுமுனையில் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்த கேமரான் கிரீன் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள் சேர்க்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் சேர்த்தது.

ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சென் 2 விக்கெட் எடுத்தார். புவனேஸ்வர் குமார், நடராஜன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

இதில் அதிகபட்சமாக மாயங்க் அகர்வால் 48 ஓட்டங்கள் எடுத்தார். தொடர்ந்து ஹெயின்ரிச் கிளாசன் 36 ஓட்டங்களும், எய்டன் மார்க்ரம் 22 ஓட்டங்களும், மார்கோ ஜான்சென் 13 ஓட்டங்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ஓட்டங்களும், ராகுல் திரிபாதி 7 ஓட்டத்துடனும், அபிஷேக் சர்மா ஒரு ஒட்டமும் எடுத்தனர்.

இறுதியாக அப்துல் சமாத் 9 ஓட்டம் எடுத்து ரன் அவுட் ஆனார். இவருக்கு அடுத்ததாக மயங்க் மார்கண்டே 2 ஓட்டங்களும், புவனேஸ்வர் குமுர் 2 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆட்டத்தின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 178 ஒட்டங்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றியடைந்துள்ளது.

Latest news

டிரம்பை நிராகரித்து அல்பானீஸ் இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் 

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் Xi Jinping மற்றும் பிரதமர்...

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள்...

ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிப்பு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில் வெளியான புதிய விரிவான படங்கள்

ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...

ஆபத்தில் உள்ள வயது வந்தோருக்கான மாற்றுத்திறனாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனம்

முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான Annecto, தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த...

ஆஸ்திரேலியாவின் வரிகள் இரட்டிப்பாக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

ஆஸ்திரேலியா மீது விதிக்கப்படும் வரிகளை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 200 சதவீத வரியை அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும்,...

தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள ChatGPT

Stanford பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ChatGPT போன்ற AI chatbots கடுமையான மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் தெரியவந்துள்ளது. இது மனநோய், பித்து மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்...