எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மற்றும் லிபரல் கூட்டணி எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்துள்ளது.
ஒரு ஊடக நிறுவனம் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, ஆளும் தொழிலாளர் கட்சியின் புகழ் 39-ல் இருந்து 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணியின் புகழ் 30ல் இருந்து 28 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டினின் தனிப்பட்ட செல்வாக்கு மைனஸ் 11ல் இருந்து மைனஸ் 28 சதவீதமாக குறைந்துள்ளது.
பூர்வீக மக்கள் பிரதிநிதித்துவப் பிரேரணையை லிபரல் கூட்டணி எதிர்க்கத் தீர்மானித்தமையும், அதன் முன்னணி எம்.பி.க்கள் பலர் பிரேரணைக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தமையும் இதற்கான பிரதான காரணங்களாகும்.