உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா சாதனை படைத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி, ப்ளூம்பெர்க் இணையதளம் இன்று இந்தியாவின் மக்கள் தொகை 1.428 பில்லியன் என்று தெரிவித்துள்ளது.
இது சீனாவின் மக்கள் தொகையான 1.425 பில்லியனை விட அதிகம்.
ஆனால், இதை இந்தியாவோ, சீனாவோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்த ஆண்டு இறுதிக்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டது.