தொழிலாளர் கட்சி அரசு முன்மொழிந்த பூர்வீக மக்கள் பிரதிநிதித்துவ தீர்மானத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி கிடைக்கும் என சொலிசிட்டர் ஜெனரல் பரிந்துரைத்துள்ளார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான மிக உயரிய வழக்கறிஞரான அவர் அளித்துள்ள இந்தச் சான்றிதழ், பிரதமர் அந்தோணி அல்பானீஸ்க்கு கிடைத்த உயர்ந்த ஆதரவாகக் கருதப்படுகிறது.
சிட்னியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், சொலிசிட்டர் ஜெனரல் அளித்துள்ள பரிந்துரையால் தொழிற்கட்சி அரசாங்கம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறான மதிப்பீட்டைப் பெற்றதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்திற்கு பூர்வீக பிரதிநிதித்துவத்தை கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பு இந்த வருட இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.