Newsமெட்டாவில் மேலும் 4 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்

மெட்டாவில் மேலும் 4 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்

-

கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள சர்வதேச பொருளாதார நெருக்கடியால் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர், பேஸ்புக், டிஸ்னி, அமேசான், வால் ஸ்டிரீட் உட்பட பல நிறுவனங்களும் ஆள்குறைப்பை மேற்கொண்டுள்ளன.

இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

அதை தொடர்ந்து கடந்த மாதம் மேலும் 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது.

இந்த நிலையில் தற்போது 3-வது கட்டமாக மேலும் 4,000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது மெட்டா ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

அமெரிக்க ரகசிய சேவையில் சேர்ந்த 13 வயது சிறுவன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13 வயது சிறுவனை அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக நியமித்துள்ளார். டிஜே என்ற மைனர் ஒருவர் ரகசிய புலனாய்வு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கானிலிருந்து ஒரு நல்ல செய்தி

இரண்டு முறை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 88 வயதான போப், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...