அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் பலமான தலைவர் ஒருவர் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக அவுஸ்திரேலியா இலங்கைக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் உண்மைகளை அறிவிக்கும் போதே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் மாலத்தீவு பிரஜை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியப் பாதுகாப்புப் படையினரால் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் பின்வரும் உண்மைகள் வெளியாகியுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இந்த சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 03 நாட்களுக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரிடம் விடுவிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.