விக்டோரியா மாகாணத்தில் இயங்கும் மற்றொரு கட்டுமான நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளன.
Mahercorp தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது வங்குரோத்து நிலை அல்ல எனவும் சுமார் 05 வாரங்களுக்கு சுமார் 730 நிர்மாணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹெர்கார்ப் நிறுவனம் எதிர்காலத்தில் வேறொரு தரப்பினரால் கையகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருவதே இதற்குக் காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
போர்ட்டர் டேவிஸ் கட்டுமான நிறுவனம் சரிந்த சில வாரங்களில் இது போன்ற இரண்டாவது சம்பவம் பதிவாகியுள்ளது.