Newsபிரபல கொரிய பாப் பாடகர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல கொரிய பாப் பாடகர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி

-

தென்கொரியாவின் பிரபல பாப் பாடகர் மூன்பின் உயிரிழந்தது அந்நாட்டு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்தவர் பிரபல பாப் இசை பாடகர் மூன்பின். ஆரம்பத்தில் மாடல், நடிகராக இருந்த மூன்பின் பின்னர் தென்கொரியாவின் அஸ்ட்ரோ இசை குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து மூன்பின் சன்ஹா இசைக் குழுவில் இருந்து வந்தார். 25 வயதான மூன்பின் தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மூன்பின்னின் மரணம் தென்கொரிய பாப் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் மூன்பின் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கொரிய பாப் நட்சத்திரங்களின் மரணங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன.

பிரபல பாடகர்கள் சுல்லி, கோ ஹாரா, ஜோ யுன் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது மூன்பின் மரணம் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்பின் மரணத்துக்கு பல்வேறு இடங்களில் ரசிகர்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...