குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சுற்றுலாத்துறை மீண்டும் பின்னடைவை பதிவு செய்துள்ளது.
கோவிட் காலத்தில் மூடப்பட்டிருந்த எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதால், பெரும்பாலான மக்கள் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு குடிபெயர்ந்தனர்.
ஆனால், கடந்த ஈஸ்டர் விடுமுறையின் போது, பிரிஸ்பேன் உள்ளிட்ட குயின்ஸ்லாந்து நகரங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி, கணிசமான எண்ணிக்கையிலான ஹோட்டல் அறைகள் காலியாக இருந்ததுடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்கு முதன்மைக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
எதிர்பார்த்த வருமான இலக்கை எட்ட முடியாமல் குயின்ஸ்லாந்து சுற்றுலாத்துறை சற்று பின்னடைவைக் காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.