Newsபிரபலங்களின் புளூ டிக்கை (blue tick) நீக்கிய ட்விட்டர்

பிரபலங்களின் புளூ டிக்கை (blue tick) நீக்கிய ட்விட்டர்

-

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

அதன்படி ட்விட்டர் கணக்குகளை சரிபார்க்கும் சேவைக்கு நிறுவனம் கட்டணம் நிர்ணயித்தது.

இதற்காக ஒரு பயனர் ஒரு மாதத்திற்கு 8 டொலர் கட்டணம், அதாவது இந்திய ரூபாயில் 650 செலுத்த வேண்டும் என தெரிவித்தது.

இதற்கு ட்விட்டர் வாடிக்கையாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் இந்த அறிவிப்பை வரவேற்றனர்.

ட்விட்டர் கணக்கு சரிபார்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த வாடிக்கையாளர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தினர்.

ஆனால் பல வாடிக்கையாளர்கள் இந்த கட்டணத்தை செலுத்தாமல் இருந்தனர்.

இதையடுத்து கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் புளூ டிக் blue tick) கணக்குகளை நீக்கி விடுவோம் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.

அதன் பின்பும் வாடிக்கையாளர்கள் இதற்கான கட்டணத்தை செலுத்தவில்லை.

இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் கணக்குகளில் புளூ டிக்கை (blue tick) நீக்க தொடங்கியது. உலக கத்தோலிக்கர்களின் புளூ டிக்குகள்(blue tick) நீக்கப்பட்டுள்ளன.இதுபோல தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, விஜய், விஜய் சேதுபதி உட்பட பலரது ட்விட்டர் புளூ டிக்குகள்(blue tick) நீக்கப்பட்டுள்ளது.

Latest news

Coles-ஐ குறிவைத்து கடைகளில் நடக்கும் திட்டமிட்ட குற்றச் சம்பவங்கள்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடி நிறுவனமான Coles, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்புகளின் செல்வாக்கின் கீழ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்களுக்கு எதிரான திருட்டு மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. மேலும்...

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...