குயின்ஸ்லாந்து மாநில அரசு பாலியல் தொழிலை சட்டப்பூர்வச் செயலாக அங்கீகரிக்க வேண்டும் என்ற பரிந்துரையைப் பெற்றுள்ளது.
மாநிலத்தின் தற்போதைய சட்டங்களின்படி, மாநில அரசிடம் பதிவு செய்யப்பட்ட 20 இடங்களில் மட்டுமே பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான சேவைகளை வழங்க முடியும்.
எந்த வகையிலும், இந்தப் பரிந்துரைகள் அடங்கிய முன்மொழிவை குயின்ஸ்லாந்து அரசு ஏற்றுக்கொண்டால், பாலியல் தொழிலாளர்கள் எந்த இடத்திலிருந்தும் தங்கள் வேலையைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
குயின்ஸ்லாந்து சட்ட சீர்திருத்த ஆணையம் மாநில அரசுக்கு அளித்துள்ள இந்த அறிக்கையின்படி, பாலியல் தொழிலாளர்களை மற்ற தொழிலாளர்களுடன் சமமாக கருதி அவர்கள் சுதந்திரமாக தங்கள் செயல்பாடுகளை நடத்த அனுமதிக்க வேண்டும்.
தொலைக்காட்சி உள்ளிட்ட பொது ஊடகங்களில் பாலியல் சேவைகள் தொடர்பான விளம்பரங்கள் வெளியிடப்படுவதைத் தடுக்கும் வகையில் போடப்பட்டுள்ள சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது.
மேலும், காவல்துறை அதிகாரிகள் நடத்தும் சோதனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.